ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருந்தது. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கினால் இதன் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை அமேசான் ப்ரைம் நிறுவனம், நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்கு கைப்பற்றி வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கிலிருந்து முதல் படமாக ‘நிசப்தம்’ படத்தைக் கைப்பற்றியுள்ளது அமேசான். அனுஷ்கா நடித்துள்ள படம் என்பதால், ஆந்திரா – தெலங்கானா திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என செய்திகள் உலா வந்தது.
அதற்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட் ட்விட்டரில் விளக்கம் கூறியுள்ளார்.


“எங்களின் நிசப்தம் என்ற படத்தின் ரிலீஸ் பற்றி மீடியாவில் யூகத்தின் அடிப்படையில் பல தகவல்கள் பரவி வருகிறது. ஒன்றை மட்டும் விளக்கி கூற விரும்புகிறோம், ‘தியேட்டர் ரிலீஸுக்கு தான் நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம்’. ஆனால் ஒருவேளை சூழ்நிலை சரியாக அமையாமல் நீண்ட காலத்திற்கு இருந்தால் நாங்கள் மாற்று வழியான OTT தளத்தை தேர்ந்தெடுப்போம். சிறந்தது நடக்கும் என நம்பிக்கை வைப்போம்” என கோனா வெங்கட் கூறியுள்ளார்.