
சென்னை: கடலின் மேற்பரப்பில் நிலவும் மிக அதிபட்ச வெப்பநிலை, அம்ஃபான் போன்ற புயல்களுக்கு வலிமை அளித்ததுடன், பவளப் பாறைகள் போன்ற சூழலியலின் மிக முக்கியமான அம்சங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கடற்கரைக்கு அருகே இந்த அபாய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பவளப் பாறைகள் கடந்த பல ஆண்டுகளாகவே, பல்வேறு காரணிகளால் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
என்சிசிஆர் என்ற கடலாய்வு நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மன்னார் வளைகுடாவில், கடந்த ஏப்ரல் நடுப்பகுதி தொடங்கி, மே மாதம் நடுப்பகுதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 85% பவளப் பாறைகள் வெளுப்பாக மாறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கடலின் மேற்பரப்பு வெப்பநிலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மனோலி தீவுகளில் இயற்கை வாழிடம் மற்றும் மறுசீரமைப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், இந்த வெளுப்பு நிலை கண்டறியப்பட்டது. அந்த மொனாலி தீவுகளில்தான் பாலிப்கள் நடப்பட்டுள்ளன.
ஆம்ஃபன் புயல் தோன்றுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், வங்காள விரிகுடாவின் வடக்கு & தெற்கு பகுதிகளில் விடப்பட்ட சில பருவநிலைப் பதிவு மிதவைகள், கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 32-34Rs C என்ற அளவிற்கு இருந்ததை பதிவுசெய்துள்ளன.
Patrikai.com official YouTube Channel