சென்னை:
மத்திய நிதி அமைச்சரின் 4 நாட்கள் அறிவிப்பில் ஒன்றுமே இல்லை என்று முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார திட்டங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த கடந்த 13ந்தேதி முதல் தொடர்ந்து இன்று 4வது நாட்களாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இதுகுறித்து, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் விமர்சித்து உள்ளார்.
அதில்,
‘ஏழைக் குடும்பங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நாள் கூலி தொழிலாளர்கள், சுய வேலை செய்பவர்கள், வேலையிழந்த தொழிலாளர்கள், கீழ்த்தட்டில் உள்ள நடுத்தர மக்கள் ஆகியோருக்கு எந்தப் பயனும் இல்லாத நிதியமைச்சரின் அறிவிப்புகளை நான்கு நாட்களாகக் கேட்டோம்.
மேற்குறிப்பிட்டவர்களுக்கு நிதியமைச்சரின் முதல் தவணை அறிவிப்பில் எதுவுமில்லை. இரண்டாவது தவணை அறிவிப்பில் புலம் பெயர்ந்து திரும்பியவர்களுக்குத் தலா 10 கிலோ தானியத்திற்கு ரூ 3500 கோடி மட்டுமே. மூன்றாவது, நான்காவது தவணை அறிவிப்புகளில் பூஜ்யம். வாழ்க இந்திய ஜனநாயகம்!’
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.