நைனிடால் :
40 நாட்களாக ‘சரக்கு’ கடைகள் மூடியிருந்த நிலையில், நேற்று அதை மீண்டும் திறந்து கடந்த 40 நாட்களாக மிகவும் சிரமப்பட்டது யார் என்று உலகறியச் செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும்.
வேலிதாண்டிய வெள்ளாடுகளாய் தமிழக எல்லையோர கிராமங்களில் இருந்தவர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடக சரக்குகளை வாங்கி ‘கிக்’ ஏற்றுக்கொண்ட நிலையில், இவர்களின் இந்த சிரமம் நீங்க மே 7 முதல் தமிழகத்திலேயே சரக்கு கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக அமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் நேற்று சரக்கு கடைகள் திறக்கப்பட்டது, நைனிடால் நகரில் பெய்த ஆலங்கட்டி மழையையும் பொருட்படுத்தாது, அங்குள்ள மக்கள் கொட்டும் பனிமழையிலும் தங்களின் இரவுப்பொழுதை இனிமையாக்க சமூக இடைவெளியை கடைப்பிடித்து சரக்கு வாங்க காத்திருந்தனர்.
வீடியோ இணைப்பு…..நன்றி