இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன்!🙏🏻 #தீரன்சின்னமலை #dheeranday pic.twitter.com/m3eo7vgWvM
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) April 17, 2020
கோவை மாவட்டத்தில் பிறந்து ,எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகராக இருந்து தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் சத்யராஜ். இவரது மகனான சிபிராஜ் நடிகர் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
நடிகர் சிபிராஜ் கடந்த செப்டம்பர் மாதம் 2008 ஆம் ஆண்டு ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தீரன் எனும் மகன் உள்ளார் .
சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சிபிராஜ் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.