லக்னோ:

த்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை  4067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 109 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில், யோகி ஆட்சி செய்து வரும்,  உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27 பேருக்கு  உறுதிசெய்யப்பட்டதையடுத்து, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 305ஆக உயர்ந்து உள்ளது. அதிகபட்சமாக கவுதமபுத் நகரில்  69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதிப்புக்குள்ளான  305 பேரில்,  159 பேர் டெல்லி இமாம் தப்லிக் மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.