டெல்லி:
தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை டெல்லியில் 523ஆக உயர்ந்து இருப்பதாக மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற டெல்லி தப்லிஜி ஜமாத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
இன்று அடையாளம் காணப்பட்டுள்ள 20 பேரில், 10 பேர் இஸ்லாமிய ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள், பாதிக்கப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கையில், 330 பேர் தப்லீக் மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவித்தவர், கொரோனா பலி எண்ணிக்கை 7-ஆக அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.