சென்னை
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள் பின் வருமாறு.
சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதன்படி திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு வி க நகர், அம்பத்தூர், பெருங்குடி, மற்றும் சோழிங்க நல்லூர் ஆகிய இடங்களில் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை
அண்ணாநகர், அரும்பாக்கம் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட கோடம்பாக்கத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளசரவாக்கம் மற்றும் போரூரில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாந்தோம், ஆலந்தூர், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.