சென்னை:

கொரோனா தொற்று நிவாரணத்தில் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்றும், விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும் என்றும்  அகில இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் தேசிய பொதுச்செயலாளர் வாழப்பாடி இராம சுகந்தன் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் எதிரொலியாக,  மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பண்ணைத் தொழிலாளர்கள், விவசாய நிறுவனங்கள், விவசாய பொருட்களுக்கும் ஊரடங்கில் இருந்து விலக்கு  அளிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விவசாய நடவடிக்கைகள் தொடர்பான கூடுதல் பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கும் புதிய வழிகாட்டு தல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில்,  “21 நாள் ஊரடங்கு தொடர்பாக, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வெளியிட்ட இரண்டாவது கூடுதல் அறிவிப்பில், விவசாயிகள், விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதில் ஈடுபட்டுள்ள ஏஜென்சிகள், மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட நிறுவனங்கள், அறுவடை மற்றும் விதைப்புக்கு இடையேயான மாநிலங்களுக்கு இடையேயான இயக்கம் தொடர்புடைய இயந்திரங்கள் உற்பத்தி, உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகளின் பேக்கேஜிங் அலகுகள். 21 நாள் பூட்டுதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, கடந்த 25ந்தேதி  இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் தேசிய பொதுச்செயலாளர் வாழப்பாடி இராம சுகந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தற்போது, விளைச்சல் முடிந்து,  அறுவடை செய்யப்பட் டுவிற்பனைக்கு செல்லும் வேளையில்,  அரசின் ஊரடங்கு உத்தரவு காரணமாக, அவர்கள் அறுவடை செய்யும் பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், எனவே, மத்திய மாநில அரசுகள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும், விளைச்சல் இழப்பை கணக்கிட்டு, அதற்கேற்றார் போல  அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

மத்திய நிதி அமைச்சர், இதை கருத்தில்கொண்டு, தற்போது விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது.

கொரோனா தொற்று நிவாரணத்தில் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை… வாழப்பாடி இராம சுகந்தன்..