கொரோனாவை பரப்புமாறு ட்விட்டரில் அறைகூவல் விடுத்த குரூரன் கைது செய்யப்பட்டுள்ளான்.

பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் முஜீப் முகமது என்பவன், தனது ட்விட்டரில் ஒரு செய்தியை பரவ விட்டான்.

என்ன செய்தி?

’’ எல்லோரும் ஒன்று கூடுவோம். வெளியே செல்வோம். திறந்த வெளியில் நின்று தும்முவோம். தும்முவோம். கொரோனா வைரசை பரப்புவோம்’’ என்பதே, அவன் ஜனங்களுக்கு சொன்ன அறிவுரை.

அவனது முகநூல் பதிவு, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

உறைந்து போன மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று பொறியாளர் முகமதுவை பொறி வைத்து
பிடித்தனர். அவனிடம் இருந்து, மொபைல் போன், லேப்டாப், போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த ஆசாமியை மென்பொருள் நிறுவனம், நிரந்தரமாக வேலையை விட்டு நீக்கி விட்டது. எதற்காக இப்படி ஒரு குரூர பதிவை அவன், ட்விட்டரில் பதிய விட்டான்?

நம்மை போன்றே, போலீசுக்கும் இதற்கான காரணம் தெரியவில்லை. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.