சென்னை
மக்கள் ஊரடங்கு தினமான இன்று விஜயகாந்த் ஒரு திருமணத்தை முகக் கவசம் அணிந்து நடத்தி வைத்துள்ளார்.
இன்று கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடெங்கும் மக்கள் ஊரடங்கு எனப்படும் சுய ஊரடங்கு நடைபெறுகிறது. அதையொட்டி அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல வர்த்தக நிறுவனங்களும் டாஸ்மாக் உள்ளிட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய வீட்டில் தனது கட்சித் தொண்டர் விமல் திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்தி உள்ளார். அவருடன் இந்த திருமணத்தில் அவர் மனைவி பிரேமலதா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கலந்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்து விஜயகாந்த் டிவிட்டரில்,
விமல்-கமலி திருமணம் இன்று எனது தலைமையில் திருமணமண்டபத்தில் நடைபெறவிருந்தது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்கும் அதே வேளையில்,மணமக்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்,அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எளிய முறையில், எனது இல்லத்தில் நடைபெற்றது.”
எனப் பதிந்துள்ளார்.