டெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரான முகுஸ் வாஷ்னிக் தனது 60வயதில் திருமணம் செய்துள்ளார். தனது நீண்டகால பெண் நண்பரை அவர் திருமணம் செய்துள்ளார். அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவரான முகுல் வாஸ்னிக் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் பாலகிருஷ்ணா வும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரே.
ஏற்கனவே மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளவர், தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இவர் தனது நீண்டகால நண்பரான ரவீனா குரானாவை தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார். டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இந்த திருமணம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், அம்பிகா சோனி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் உள்பட பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.