ஆக்லாந்து: இரண்டாவது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதன் மூலம், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துவிட்டது இந்திய அணி.

டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் ஆர்ப்பாட்டமாக வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை பரிதாபமாக இழந்துள்ளது.

நியூசிலாந்து நிர்ணயித்த 274 என்ற சாதாரண இலக்கை விரட்டிய இந்திய அணி, தொடக்கம் முதலே விரைவாக விக்கெட்டுகளை இழந்துவந்தது. துவக்க வீரர்கள் சொதப்பினர். நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 15 ரன்களுக்கு வெளியேறினார்.

ஒவ்வொருவரும் தம் பங்குக்கு பந்துகளை வீணாக்கினர். ஷ்ரேயாஸ் 52 ரன்களை அடித்தார். பின்வரிசையில் ஜடேஜா 55 ரன்களை அடித்தாலும் அதற்காக 73 பந்துகளை செலவிட்டார்.

நவ்தீப் சைனி 45 ரன்கள் எடுத்துப் போராடியும் பலனில்லை. இறுதியில், 48.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி.
நியூசிலாந்து தரப்பில் பென்னட், செளதி, ஜேமிஸன் மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.