சென்னை
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் முறைகேடு செய்த ஐவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டி என் பி எஸ் சி (தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம்) குரூப் 2 தேர்வை நடத்தியது. 2016 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் நடந்த இந்த தேர்வில் 813 கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் பொதுக் கவ்வி, கிராம நிர்வாக அடிப்படை, மனத் திறன் சோதிப்பு மற்றும் தமிழ் ஆங்கில மொழிப் புலமை குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்த தேர்வில் தேர்வானவர்களில் சிலர் லஞ்சம் கொடுத்துத் தேர்வாகி உள்ளதாகப் புகார் வந்தது. இது குறித்து நடந்த விசாரணையில் 5 பேர் இவ்வாறு தேர்வாகி உள்ளதாகக் கண்டறியப்பட்டது. இந்த ஐவரைத் தவிர வேறு சிலரும் இவவாறு ஊழல் செய்திருக்க வாய்ப்புள்ளதால். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
இதில் தற்போது கிராம நிர்வாக அதிகாரியாகப் பணி புரியும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த ஊழலில் தொடர்புடைய முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் இன்று சரண் அடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.