டெல்லி:

ந்திய கால்பந்து வீராங்கனை பாலாதேவி வெளிநாடு கிளப் அணிக்காக ஆட ஒப்பந்தமாகி உள்ளார். உலகில் தொழில்முறை கால்பந்து வீரராக ஆன முதல் இந்திய பெண் பாலா தேவி.

மணிப்பூர் மாநில மக்களுக்கு கால்பந்து விளையாட்டின்போது அதீத ஆர்வம் கொண்டவர்கள். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பாலாதேவி கடந்த 10 ஆண்டுகளாக இந்திய கால்பந்து அணியில் ஆடி வருகிறார். பல்வேறு சாதனைகளை நிகழ்ச்சி, உலக அளவில் இந்திய பெண்கள் கால்பந்து அணியை உயர்த்தி பிடித்துள்ளார். அதுபோல  மணிப்பூரை சேர்ந்த  தங்மெய் க்ரேஸின் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்று கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியன் மகளிர் லீக் தொடரில் வளர்ந்துவரும் வீராங்கனை விருதை தட்டிசென்றார்.

கடந்த சில மாதங்களாக இந்திய மகளிர் கால்பந்து அணி அதிகளவில் முன்னேற்றத்தை கண்டுள்ளது: கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முதல்முறையாக ஒலிம்பிக் தகுதிச்சுற்றின் முதல் சுற்றை நிறைவு செய்தது. பின்னர் பல்வேறு போட்டிகளில் ஆடி  வெற்றி பெற்று வருகிறது.

இந்த நிலையில்,   கால்பந்து வீராங்கனை பாலா தேவி ,  ஸ்காட்லாந்த் நாட்டின் ரேஞ்சர்ஸ்  கால்பந்து கிளப்பிற்காக விளையாட ஒப்பந்தமாகி உள்ளார்.  இதன் மூலம் வெளிநாட்டு கிளப் அணிக்காக விளையாடும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பாலா தேவி பெற்றுள்ளார் .

பாலா தேவி இந்திய தேசிய மகளிர் அணியின் தற்போதைய நிலையில்  கோல் அடித்த வீராங்கனை என்ற சாதனைக்குரியவர். கடந்த  2010 ம் ஆண்டு முதல் விளையாடி வரும் பாலாதேவி, இதுவரை நடைபெற்ற 58 ஆட்டங்களில் 52 விளையாடியுள்ளார்., இது தெற்காசிய பிராந்தியத்தில் அதிக சர்வதேச கோல் அடித்த வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தமானவர்.