இயக்குனர் மேக்னா குல்சர் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்திருக்கும் படம் சபாக்.
இப்படம் முழுக்க முழுக்க ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழக்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் .
2014-ம் ஆண்டு சர்வதேச அளவில் தைரியமான பெண் என்ற விருதை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா லக்ஷ்மி அகர்வாலுக்கு வழங்கி கவுரவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தில் கூறப்பட்ட கருத்தால் ஈர்க்கப்பட்டு உத்தரகண்ட் அரசு தனது மாநிலத்தில் ஒரு புது சட்டத்தையே அமல்படுத்தியுள்ளது.ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பென்சன் திட்டத்தை உத்தரகண்ட் மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் 5,000 ரூபாய் – 6,000 ரூபாய் வரையில் பென்சன் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசு வேகமாக செயல்படுத்தி வருகிறது என மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா தெரிவித்துள்ளார்.
சப்பக் திரைப்படத்துக்கு புதுச்சேரி, மத்திய பிரதேஷ், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் வரிவிலக்கு அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.