டெல்லி:

த்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்க  தமிழகத்தைச் சேர்ந்த  காங்கிரஸ் எம்.பி.மாணிக் தாக்கூர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா, ரேப் இன் இந்தியாவாக மாறி வருவதாக தெரிவித்தார். இதற்கு பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்பட  பெண் எம்.பி.க்கள்  மக்களவை மற்றும் மாநிலங்களவையில்  ராகுல் குறித்து அவதூறாக பேசியதுடன், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைத்தனர்.

இந்த நிலையில், மத்தியஅமைச்சர் ஒருவரே, எம்.பி. மீது தரக்குறைவாக விமர்சித்ததுடன், அவையை முடக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டதற்கு எதிராக உரிமை மீறல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகத்தை சேர்ந்த மாணிக் தாக்கூர் எம்.பி. மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாசை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.