குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்த்து காங்கிரஸ் வழக்கு! 18ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

Must read

டெல்லி:

குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்து வழக்கு வரும் 18ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மசோதாவை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி மற்றும், முன்னாள் திரிபுரா அரசர் பிரட்யோத் கிஷோர் தேப் ( Pradyot Kishor Deb Barman) சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக் சிங்வி தலைமைநீதிபதி பாப்டேவிடம் முறையிட்டார். இதையடுத்து வரும் 18ந்தேதி (புதன்கிழமை) ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்த வழக்குடன் இந்த வழக்கையும்  சேர்த்து  விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article