லக்னோ:
இன்று நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதால், அயோத்தி உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உத்தர பிரதேசத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ந்தேதி உ.பி.யில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் 27வது ஆண்டு நினைவுதினம் இன்று இஸ்லாமியர்களில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம், பாபர் மசூதி இருந்த இடம் ராமர் கோவில் இருந்த இடம், என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 27வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கபபடுகிறது. இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அயோத்தி நகரம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.raa