கடலூர்:

டலூரில் கட்டப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் மணிமண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்

இந்திய விடுதலைக்காக போராடிய ராமசாமி படையாச்சியார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர்,  காமராஜர் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றி உள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில், தமிழகஅரசு,  ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், அவருக்கு கடலூரில் மணிமண்டபம் கட்டப்படும் என்றும் அறிவித்தது.

இதையடுத்து, கடலூர் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ராமசாமி படையாச்சியாரின் முழுஉருவ வெண்கலச் சிலையுடன்  மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும்,  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இணைந்து திறந்துவைத்தனர்.

விழாவில் பேசிய முதல்வர்,  எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் தொட்டே பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஆட்சியை அதிமுக வழங்கி வருவதாகக் கூறினார்.