வேலூர்:

ஜோலார்பேட்டை பகுதியில் கட்டப்பட்டுள்ள  புதிய கால் நடை மருத்துவமனையை அமைச்சர் வீரமணி திறந்து வைத்தார்.

ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையப்பன் நகர் பகுதி தெற்கச்சி வட்டத்தில்.31.லட்ச மதிப்பீட்டில் புதியதாக கட்டிமுடித்த  கால்நடை மருத்துவமனை  கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையை   அமைச்சர் கே.சி. வீரமணி திறந்து வைத்தார்.

ஜோலார் பேட்டை அருகே உள்ள அம்மையப்பன் நகர் பகுதி மக்கள் கால்நடை மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் பத்து கிலோமீட்டர் தொலைவில் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதன் காரணமாக, தங்கள்  பகுதிக்கு கால்நடை மருத்துவமனை தேவை என  நீண்டகாலமாக அந்தப்பகுதி மக்கள்  வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் மக்களின்  கனவை நினைவாக்கும்  வகையில்  31 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு இன்று  திறக்கப்பட்டது. அமைச்சர் வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்.

இந்த மருத்துவமனை மூலம், ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அம்மையப்பன் நகர்,  மோட்டூர். கட்டேரி, முத்தூர் உள்பட 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும்.

அதைத்தொடர்ந்து,  ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தாம்பலேரி முத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மானிய முறையில் 21 சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் வீரமணி,  210 மகளிகளுக்கு  1. கோடி25 லட்சம் கடன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வருகின்ற ஊராட்சி மன்ற தேர்தலில் ஆளுங்கட்சி க்கு சாதகமாக ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்தால் மக்களிடையே எல்லாத் திட்டங்களும் சென்றடையும் என்று கூறினார்.

மருத்துவமனையை திறக்கும் அமைச்சர் …. வீடியோ

 

[youtube-feed feed=1]