டில்லி

சேமிப்பு மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தைப் பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைத் தொடர்ந்து குறைத்து வருகிறது.  நாட்டில் தற்போதுள்ள பொருளாதார முடக்கத்தால் பணப்புழக்கம் கடுமையாகப்  பாதிப்பு அடைந்துள்ளது.   அதைச் சீராக்க இந்த வட்டி குறைப்பு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.  இதையொட்டி பாரத ஸ்டேட் வங்கி தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் வட்டியைக் குறைத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.1 லட்சம் வரை உள்ள சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதத்தை 3.5%லிருந்து 3.25% ஆக குறைத்துள்ளது.   இந்த வட்டிக் குறைப்பு வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர உள்ளது.  இதைப் போல் வைப்பு நிதி வட்டியிலும் இன்று முதல் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

வைப்பு நிதி வட்டி விவரங்கள் பின் வருமாறு

காலம்                        பழைய விகிதம்                   புது விகிதம்

7 முதல் 45 நாட்கள் வரை                          5%                                           4.50%

46 முதல் 179 நாட்கள் வரை                      6%                                           5.50%

180 முதல் 210 நாட்கள் வரை                    6.3%                                         5.8%

211 முதல் 1 வருடம் வரை                          6.3%                                         5.8%

1 முதல் 2 வருடங்கள் வரை                      6.9%                                         6.4%

2 முதல் 3 வருடங்கள் வரை                      6.75%                                       6.25%

3 முதல் 5 வருடங்கள் வரை                      6.75%                                       6.25%

5 முதல் 10 வருடங்கள் வரை                    6.75%                                       6.25%