டில்லி
இந்த மாதம் முதல் வருமான வரி விதிகளில் 5 முக்கிய மாறுதல்கள் இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்த வருடத்துக்கான நிதி நிலை அறிக்கையில் நிதி அமைச்சர் வருமான வரி விதிகளில் சில மாறுதல்களை அறிவித்தார். டிடிஎஸ் குறித்த இந்த புதிய விதிகள் இந்த வருடம் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்த புதிய விதிமுறைகளின் கீழ் ஊழியர்களுக்கு ஒப்பந்த தாரருக்கு, தரகர்களுக்கு மற்றும் பிடித்தம் செய்யும் வரி (டிடிஎஸ்), உள்ளிட்டவற்றுடன் ஒரு சில இன்சூரன்ஸ் வரி வருமானங்களுக்கு 2% வரி பிடித்தம் செய்ய வேண்டியது அமலுக்கு வந்தது.
அத்துடன் வங்கியில் இருந்து ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் அதற்கும் டிடிஎஸ் செலுத்த வேண்டி இருந்தது. அதில் விவசாய பொருட்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 5 விதிகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விவரம் வருமாறு :
1. தனிப்பட்ட நபர் அல்லது இந்து பிரிக்கப்படாத குடும்பத்தினர் ஒப்பந்ததாரர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், மற்றும் தரகர்களுக்குக் கட்டணம் அளிக்கும் போது அந்த கட்டணம் வருடத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் இருந்தால் அவர்களிடம் இருந்து 5% வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும். இவ்வாறு பிடிக்கப்பட்டும் வரி சம்பந்தப்பட்டவர்கள் பான் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.
2. அசையாச் சொத்துக்கள் வாங்கும் போது அந்த மதிப்புடன் வாங்குபவர் செலுத்தும் கிளப் கட்டணம், பராமரிப்பு கட்டணம், வாகனம் நிறுத்துமிட கட்டணம், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புக் கட்டணம் உளிட்டவைகளுக்கும் சேர்ந்து வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும். இதற்காக வரி விகிதம் அனைத்தும் இணைந்து ரூ.50 லட்சத்துக்கு மேல் இருந்தால் 1% வரி பிடித்தம் செய்ய வேண்டும்.
3. ஒருவருடைய பான் மற்றும் ஆதார் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால் அவர் தனது பான் எண்ணுக்கு பதிலாக ஆதார் எண்ணை குறிபிடலாம். அதே நேரத்தில் பான் எண் வழங்கப்படாத நிலையிலும் ஆதார் எண்ணை குறிப்பிடலாம்.
4. கூட்டுறவு வங்கி, தபால் நிலைய வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளில் இருந்து ஒருவர் வருடத்துக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் அந்த பணத்துக்கு 2% வரிப் பிடித்தம் செய்யப்படும்.
5. குறிப்பிட்ட சில ஆயுள் காப்பீட்டுத் தொகை வரி விதிப்பின் கீழ் வருமானால் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட 1% வருமான வரிக்கு பதில் 5% வரி பிடித்தம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் இந்த தொகை ரூ.1 லட்சஹ்த்டுக்கு குறைவாக இருந்தாலோ அல்லது இறப்புக்கான் இழப்பீட்டு தொகையாக இருந்தாலோ வரி பிடிக்கத் தேவை இல்லை.