சென்னை:

மைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து உள்ளது.

அமைச்சர் பதவியை முறைகேடாக  பயன்படுத்தி 2011 முதல் 2013 ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ராஜேந்திர பாலாஜி மீது, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக  லஞ்சஒழிப்புத்துறை விசாரித்து அறிக்கைத் தர நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்றைய விசாரணையின்போது,   அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் முகாந்திரம் இல்லாததால்  மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக அறிக்கை  லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்தது.

இதைத்தொடர்ந்து,  வழக்கு விசாரணையின் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.