டில்லி:
2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
முன்னதாக ஜனாதிபதி மாளிகைக்கு அதிகாரிகளுடன் சென்ற நிர்மலா, அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பட்ஜெட் நகலை வழங்கி வாழ்த்து பெற்றார். அதையடுத்து பாராளுமன்றத்துக்கு வந்த நிர்மலா முதன்முதலாக 2019-20ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் இங்கே தொகுக்கப்பட்டு உள்ளன.
புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி செய்து வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா கூறினார்.
இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதார நாடு என்ற நிலையை எட்டும்
சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான் தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல் இலக்கு
2030ம் ஆண்டு வரை ரயில்வே கட்டுமானத்துக்கு ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது
உணவு பாதுகாப்புக்காக கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு பணம் செலவிடப்பட்டுள்ளது
பாரத்மாலா மற்றும் சாகர்மாலா ஆகிய திட்டங்கள் மூலம் போக்குவரத்து துறை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது நீர்வழிப்பாதைகளை உருவாக்குவதன் மூலம், சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்
ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் நாடு முழுவதும் சம அளவில் மின்சாரம் விநியோகிக்கப்படும்.
மின்சாரத்தில் இயங்கம் வாகனங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்
நவீன குத்தகை சட்டம் இறுதி செய்யப்பட்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும்
கடந்த 5 ஆண்டுகளில் 7 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச இலவச மையல் எரி வாயு வழங்கப்பட்டு உள்ளது.
1.5 கோடிக்கும் குறைவாக வணிகம் செய்பவர்களுக்கு பென்சன் திட்டம்