டில்லி:
பிரதமர் மோடி தலைமையில் 5வது நிதிஆயோக் கூட்டம் ஜூன் 15ந்தேதி டில்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமராக மோடி 2வது முறையாக பதவி ஏற்ற நிலையில் முதல் கூட்டமும், நிதி ஆயோக்கின் 5வது கூட்டமும் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் கருத்துகள், கொள்கை முடிவு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
4வது நிதி ஆயோக் கூட்டம் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 15ந்தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.