பெங்களூரு:

டைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கர்நாடக மாநில அரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ், மதசார்பற்ற கூட்டணி புதிய வியூகங்களை வகுத்து வருகிறது.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்காத நிலையில், பாஜக ஆட்சி அமைப்பதாக தெரிவித்து பதவி ஏற்று பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து குமாரசாமி தலைமை யிலான காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைத்து செயல்பட்டு வருகிறது.

இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மாநில பாஜக தலைமை பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆபரேசன் தாமரை என்று பெயரிட்டுள்ள பாஜக தலைவர் எடியூரப்பா, ஜேடிஎஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைபேசி வருகிறார். அவரது பாச்சா இதுவரை பலிக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் உள்ள  28 தொகுதிகளில் பாஜக 26 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் காரணமாக மாநில அரசில் குழப்பம் விளைவிக்க பாஜக மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மீண்டும் ஆபரேசன் தாமரை திட்டத்தை கையில் எடுத்து மாற்று கட்சி எம்எல்ஏக்களுக்கு வலைவீசி வருகிறது.

இதன் காரணமாக கர்நாடக மாநில அரசில் சலசலப்பு நிலவி வருகிறது. ஒருசில அதிருப்தி காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எடியூரப்பாவிடம் மறைமுமாக பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதையடுத்து,    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கையாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து இரு கட்சி தலைவர்கள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலையில் கரநாடக  மந்திரிசபையில் காங்கிரசுக்கு ஒன்று மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 2 என்று மொத்தம் 3 மந்திரி பதவிகள் காலியாக உள்ளன.அந்த மந்திரி பதவிகளை அதிருப்தி எம்எல்ஏக்களான  காங்கிரசை சேர்ந்த பி.சி.பட்டீல், சுயேச்சை எம்.எல்.ஏ.வான சங்கர் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி வருகின்றன.

மேலும், மற்றொருஅதிருப்தி எம்.எல்.ஏவாபன  மகேஷ் கமடள்ளி நேற்று முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில், மாநிலபாஜக தலைவர்,  எடியூரப்பா   ‘நாங்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி  அமைக்க தயாராக இல்லை. நாங்கள் புதிதாக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்.’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், மறைமுகமாக ஆட்சியை கவிழ்க்க மீண்டும் ஆபரேசன் தாமரை திட்டத்தை செயல் படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கினற்ன.