சென்னை
தமிழக சட்டப்பேரவை நான்குநேரி தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் நாளை ராஜினாமா செய்ய உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நான்குநேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக எச் வசந்தகுமார் பதவி வகித்து வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இவர் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் நின்று பாஜக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை தோற்கடித்தார்.

சட்டப்படி ஒருவர் சட்டப்பேரவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க முடியாது. அதனால் வசந்தகுமார் தனது நான்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து அவர் கூட்டணி தலைவரான முக ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் தாம் நாளை நான்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார்.
[youtube-feed feed=1]