சென்னை:

ந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இறுதி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இறுதி வரை ஆடிய சிஎஸ்கே வீரர்  வாட்சன் தனது காலில் உள்ள ரத்தக்காயத்தை பொருட்படுத்தாது திறமையாக ஆடி 80 ரன்கள் குவித்திருந்தார்.

ஆட்டத்தின்போது எதிர்பாராதவிதமாக அவர் ரன்அவுட் ஆனது ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது.

வாட்சனின் ரத்தக்காயம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. சிஎஸ்கே ரசிகர்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வாட்சன் பேசும் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

அதில் பேசும் வாட்சன்  “ஹாய்.. கடந்த இரண்டு நாள்களாக நீங்கள் காட்டிய அன்பு மற்றும் ஆதரவுக்கு அனைவருக்கும் நன்றி. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியில் அருகே சென்றும் வெற்றிபெற முடியாமல் ஆகிவிட்டது.  ஆனால், அது ஓர் அற்புதமான இறுதி ஆட்டம். மீதம் இருக்கும் அந்த ஒரு அடியையும் எடுத்து வைக்க அடுத்த வருடம் மீண்டும் வீறுகொண்டு வருவேன். உங்களின் ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. விசில் போடு” என்று கூறி உள்ளார்.

தற்போது வாட்சனின் வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.