கொழும்பு: கடந்த ஏப்ரல் 21ம் தேதியன்று நடந்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கைகளும் இந்தியா சார்பாக வழங்கப்பட்டதாகவும், ஆனால் அதை இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து கூறப்படுவதாவது; இலங்கையில் செயல்படும் இந்திய உளவு நெட்வொர்க் மூலமாக, விரிவான தகவல்கள் இந்திய அரசுக்கு வந்து சேர்ந்தன. எனவே, அவை உரிய நேரத்தில் இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டும், அவர்களின் அலட்சியத்தால் எல்லாமே நடந்துள்ளது.
தாக்குதலுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக, குறிப்பாக தேவாலயங்கள் குறிவைக்கப்படலாம் என்று சென்றடைந்த தகவல்கள் பொருட்படுத்தப்படவில்லை. அனைத்திற்கு மேலாக, சம்பவம் நடந்த ஈஸ்டர் தினத்தன்று, சில மணிநேரங்களுக்கு முன்னதாகக்கூட எச்சரிக்கை சென்றுள்ளது.
குண்டுவெடிப்பு தாக்குதல் விரைவில் நடக்குமென அனைத்து எச்சரிக்கைகளும் கிடைத்தும், இலங்கை அரசு எதற்காக இப்படி அசட்டையாக இருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.