ஜெய்ப்பூர்

நேற்று நடந்த ஐபிஎல் போட்டி முடிவில் முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர் சவுரவ் கங்குலி கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ஐ பாராட்டி உள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் 40 ஆவது லீக் போட்டியில் டில்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டில்லி கேபிடல்ஸ் அணி வென்றது. இந்த வெற்றியினால் டில்லி அணி புள்ளி வரிசையில் முதல் இடத்தில் இருந்த சென்னை அணியை பின் தள்ளி முதல் இடத்துக்கு வந்துள்ளது.

நேற்றைய போட்டியில் டில்லி அணியில் விளையாடும் ரிஷப் பந்த் அருமையாக விளையாடினார். குறிப்பாக அவர் கடைசி ஓவரில் அடித்த சிக்சர் அனைவரையும் கவர்ந்தது. இந்த போட்டியின் இறுதியில் முன்னாள் கிரிக்கெட் அணி தலைவரான சவுரவ் கங்குலி மைதானத்தில் நுழைந்து ரிஷப் பந்தை அப்படியே தூக்கி பாராட்டினார்.

 

இது குறித்து ரிஷப் பந்த், “நேற்றைய போட்டியில் எனது போட்டியை பலரும் பாராட்டினார்கள். அதிலும் சவுரவ் கங்குலி மைதானத்துக்குள் வந்து என்னை அப்படியே தூக்கி பாராட்டியதில் நான் மிகவும் மகிழ்ந்தேன். அது எனக்கு ஒரு சிறப்பு பாராட்டு ஆகும்” என தெரிவித்துள்ளார்.