நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று (ஏப்.18) நடந்தது.
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களித்தார்.
ரசிகர்கள் அவரைப் பார்க்கக் கூடியதால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றனர்.
இதனால், வரிசையில் நிற்காமல் போலீஸ் பாதுகாப்புடன் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களித்தார்.
Patrikai.com official YouTube Channel