மும்பை: 5 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றத்தில் சிறைக்குச் சென்று, 6 மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த வடிவேல் தேவேந்திரா என்ற கயவன், தற்போது 9 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளான்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 2013ம் ஆண்டு, 5 வயது சிறுமியைக் கற்பழித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறை சென்றவன் வடிவேல் தேவேந்திரா என்ற 35 வயது கயவன். சிறையில் நன்னடத்தைக் காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டான்.

தற்போது, தனது அண்டை வீட்டில் வசித்த 9 வயது சிறுமியைக் கடத்தி, வன்புணர்வு செய்து, கொலைசெய்து, உடலை பொதுக் கழிப்பறை செப்டிக் தொட்டியில் போட்டுள்ளான். சிறுமியைக் காணவில்லை என பலரும் தேடியபோது, இவனின் மீது சந்தேகம் தோன்றியுள்ளது.

பின்னர், சிசிடிவி கேமராவைப் பார்த்தபோது, இவனுடன் சிறுமி சென்றுள்ளது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், சிறுமியை வன்புணர்வுக்கு ஆட்படுத்தி, கொலைசெய்து, கழிவுத் தொட்டியில் போட்டதாக ஒப்புக்கொண்டான்.

– மதுரை மாயாண்டி

[youtube-feed feed=1]