
1995ல் பாலிவுட்டில் ‘நசீம்’ படத்தில் அறிமுகமான நடிகை மயூரி காங்கோ தற்போது கூகுள் இந்தியா நிறுவனத்திற்கு தலைமை நிர்வாகியாக தேர்வாகி உள்ளார்.
௧௯௯௫ முதல் 2000 வரை சினிமா வாழ்க்கையில் பிசியாக இருந்த மயூரி 2000 சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அமெரிக்கா புறப்பட்டார். நியூயார்க்கில் மேலாண்மை கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.
பல கார்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி வந்த மயூரி பிரான்ஸின் விளம்பர நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்தார்.
இந்நிலையில் கூகுள் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து ராஜன் அனந்தன் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அவரது இடத்திற்கு மயூரி காங்கோ தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிற்கு பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel