சென்னை:
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை திடீரென மாயமானது. இது தொடர்பாக வீட்டில் வேலை செய்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வீட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. அவரது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 சவரன் நகைகள் திடீரென காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து, அன்பழகனின் உதவியாளர் நடராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து வீட்டில் வேலை செய்து வருபவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
வீட்டில் பணி செய்யும் பெண் நளினியிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel