சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி வரும் 8ந்தேதி கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில், தமிழக அரசுக்கு எதிராக, காட்டமாக தனது முதல் அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.
அதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவிவிட்டு அரசு இயங்க முடியாது என்று எச்சரித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,, “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசின் அடித்தளமாக விளங்குபவர்கள். அவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவிவிட்டு ஒரு அரசு இயங்க முடியாது. அப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ – ஜியோ அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.