டெக்சாஸ்:
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா பெயரில், புத்தாண்டு முதல் ‘தீபிகா தோசை’ விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தோசை விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே குஷ்பு இட்டி பெயர் பெற்றது. நல்ல புஷ்டியாக உள்ள இட்லிக்கு குஷ்பு பெயர் சூட்டப்பட்டு அது பெரும்பானோர்களால் வசிகரிக்கப்பட்டு அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2019ம் ஆண்டின் ஸ்பெஷலாக அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில், தோசைகள் லிஸ்டில் ‘தீபிகா படுகோனே’ என்ற பெயரில் தோசை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகையும் உலக அளவில் பிரபலமானவருமான தீபிகா படுகோனே சமீபத்தில்தான் நடிகர் ரன்வீர் சிங்கை மணம் முடித்தார். இந்த நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் தீபிகா படுகோனேவின் பெயரில் தோசை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த தோசைக்கு ஏகப்பட்டோர் ரசிகர்களாக மாறி வருகிறார்கள் என்றும், பலர் விரும்பி சாப்பிட்டு வருவதாகவும் அந்த ஓட்டலின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தோசையின் விலை 10 டாலர்கள் (இந்திய ரூபாயின் மதிப்புக்கு ரூ.700/- மட்டுமே) என்பது குறிப்பிடத்தக்கது.