விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் சாக்கு தயாரிக்கும் ஆலையின் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகள் கரும்புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
விருதுநகர் மாவட்டம் முறம்பு கிராமத்தில் ராம்ஜி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் சாக்கு தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செய்யும் ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஆறு மணியளவில் மின்கசிவு காரணமாக அந்த ஆலையில் உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்புத்துறை வாகனங்களளில் வந்த வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர்
பிளாஸ்டிக் கொழுந்து விட்டு எரிந்ததால், மேலும் 4 தனியார் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்க முயற்சி நடந்தது.
இந்தத் தீ விபத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீ விபத்து காரணமாக சுற்றுவட்டாரத்தில் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு கரும்புகை பரவியது