நெய்வேலி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மிது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசத் துரோக வழக்கு நெய்வேலியில் பதிவு செய்யபட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல் முருகன் மீது உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கு பதியப்பட்டுள்ளது. அதை ஒட்டி அவரைக் கைது செய்த காவல்துறையினர் அவரை புழல் சிறையில் அடைத்தனர். அங்கு அவருக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டது.
அதனால் அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர் மீது நெய்வேலி காவல் நிலையத்தில் தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பதியப்பட்ட இந்த வழக்கில் அவரை மீண்டும் காவல்துறையினர் மருத்துவ மனையில் கைது செய்துள்ளனர்.