ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் மூலவர் மீது செருப்பு வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி அருகே உள்ளது ஸ்ரீரங்கம்.   இங்குள்ள ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஆலயம் மிகவும் புகழ் வாய்ந்தது ஆகும்.    இங்கு பள்ளிகொண்ட நிலையில்  பெருமாள் காட்சி தருகிறார்.   இந்த ஆலயம் குறித்து புராணங்களிலும் சரித்திரத்திலும் காணப் படுகிறாது.

இன்று இந்த கோவிலின் உள்ளே கத்தி மற்றும் செருப்புடன் சிலர் நுழந்துள்ளனர்.   இதில் ஒருவன் கோவிலின் மூலவர் மீது செருப்பு வீசி உள்ளான்.  அங்கிருந்த பக்தர்கள் அவனைப் பிடித்துள்ளனர்.  உடனே அவனுடன் வந்த மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.    பிடிபட்டவன் கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளான்.

அவனை கோயில் பணியாளர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.  விசாரணையில் செருப்பு வீசியவன் பெயர் தர்மராஜ் என்பதும் அவன் கொத்தனார் வேலை பார்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது.   காதல் தோல்வி மற்றும் திருமணம் கைகூடாததால் ஏற்பட்ட விரக்தியில் இவ்வாறு செய்ததாக அவன் கூறி உள்ளான்.

இது குறித்து காவல்துறையினர் அவன் மனநோய் பிறழ்ந்தவனாக இருகக் கூடும் எனவும் அவனுக்கு பின்புலமாக எந்த அமைப்புக்களும் இல்லை எனவும்தெரிவித்துள்ளனர்.

பரிகார பூஜைகளுக்காக கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது.