சென்னை:
மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.
முதுகலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல், http://www.tnhealth.org என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியீடு. இணைய தளத்தில் சென்று பட்டியலை பார்த்துக்கொள்ளலாம்.
ஏற்கனவே முதுநிலை மருத்து படிப்பில், மாணவர் சேர்க்கையில், கிராமப்புற பகுதிகளில் வேலை செய்யும் மருத்துவர்க ளுக்கு ஊக்க மதிப்பெண் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் கடந்த ஏப்ரல் 20ந்தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.
அதே வேளையில், மருத்துவ மேற்படிப்புகான ‘கட்-ஆப்’ மதிப்பெண்களை 15 சதவீதம் குறைத்து மத்திய அரசு சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் முடிவெடுத்து அறிவித்து உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா கூறியிருந்தார்.
மருத்துவபடிப்பில் மேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., டி.என்.பி., டி.எம்., எம்.சி.எச்., போன்ற சிறப்பு உயர் மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை ‘நீட்’ தேர்வு முடிவு அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழக்ததில் மருத்துவ மேற்படிப்புகான தர வரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.