டில்லி:

டிட்டர் குருமூர்த்தியை ரஜினிக்கான விளம்பர விரும்பி என்றுதான் அழைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

குருமூர்த்தியின் பேச்சு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பதில் தெரிவித்து வருகினறன.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன்சாமி, குருமூர்த்தியின் கருத்து குறித்து தனது கருத்தை, டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஆடிட்டர் குருமூர்த்தியை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் உடையவர் என்று அழைக்கிறார்கள் ஆனால் அவரை ரஜினிக்கான விளம்பர விரும்பி என்றுதான் அழைக்க வேண்டும் என்றும்,  ஆடிட்டர் குருமூர்த்தி  ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் எந்தப்பதவியிலும் இல்லை என்றும் விமர்சனம் செய்துளார்.