சென்னை:
நெல்லை அருகே மணல் மாபியாக்களால் அடித்துக்கொல்லப்பட்ட காவலர் ஜெகதீசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
நெல்லை அருகே விஜயநாராயணம் பகுதியில், இரவில் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அதை தடுக்க சென்ற காவலர் ஜெகதீசை, மணல் கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட போலீஸ் ஜெகதீசன் துரை குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி ரூ. 10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். மேலும் ஜெகதீசன் துரை குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.