நாகர்கோவில்:
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நீட் தேர்வை எழுத கேரளா செல்வதற்கு வசதியாக, நாகர்கோவிலில் இருந்து செல்லும் ரெயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும் நாகர்கோவில், மங்களூர் ரெயிலை, நாளை மட்டும் அதிகாலை 2 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
காலை 2 மணிக்கு நாகர்கோவிலில் புறப்படும் இந்த ரெயில் காலை 7.45 மணி அளவில் எர்ணாகுளம் சென்றடையும்.
எர்ணாகுளம் பகுதியில் நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு செல்லும் மாணவர்கள் பயனடையும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்றுரெரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், நீட் தேர்வை எழுத செல்லும் தமிழக மாணவர்களுக்காக எர்ணாகுளத்தில் 4 இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உதவி மையத்திலும் 10 பேர் உள்ளனர்; 10 பேரில் ஒருவர் தமிழ்மொழி பேசக்கூடியவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் தெற்கு- 9567466947, 9020606717; எர்ணாகுளம் வடக்கு- 9048520012, 989532056