சென்னை:

திருவாரூர் குற்றப்பிரிவு டிஎஸ்பி.யாக இருப்பவர் முகம்மது பலூல்லா. இவர் இம்மாத இறுதியில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் பலூல்லாவை சஸ்பெண்ட் செய்து டி.ஜி.பி இன்று உத்தரவிட்டுள்ளார்.

2013-ம் ஆண்டு சென்னை தனியார் நிதி நிறுவன மோசடியை மறைக்க முகம்மது பலூல்லா 69 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் உள்ளது. இதன் காரணமாகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.