சென்னை:
பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தாலும் காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்கு முதல்வருக்கு தைரியம் கிடையாது என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மோடி தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க டில்லி சென்றுள்ளார். அவர், பிரதமர் மோடியை சந்தித்து பேச நேரம் ஒதுக்க கோரி கேட்டிருந்தும், இதுவரை ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
பிரதமர் மோடி நேரம் ஒதுக்கினாலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி பிரச்சினை குறித்து பேச மாட்டார் என்றார். பிரதமரிடம் அந்த அளவுக்கு பேச அவருக்கு தைரியம் கிடையாது என்றும், அப்படியே அவருக்கு பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் தனது பதவியை தக்க வைக்கும்படி அவரிடம் கேட்பார் என்றார்.
அப்போது செய்தியாளர்கள் மதுரை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.