லக்னோ:
உத்தரபிரதேசம் லகிம்பூர் கேரி மாவட்டம் ராம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. இதில் மணமகன் சுனில் வர்மா மணமேடையில் மணக்கோலத்தில் இருந்தார். அவரது நண்பர் ராம்சந்திரா மேடை அருகே நின்றார். அவர் தனது கை துப்பாக்கியை உடன் வைத்திருந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் மணமேடையில் இருந்த மணமகனை நோக்கி துப்பாக்கியால் 2 முறை சுட்டார். முதல் குண்டுக்கு தப்பிய மணமகன் 2வது குண்டு பாய்ந்து மணமகன் சுனில் மேடையிலேயே சரிந்து விழுந்து இறந்தார். இதைதொடர்ந்து ராம்சந்திரா தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமச்சந்திராவை தேடி வருகின்றனர்.
திருமண கொண்டாட்டத்தில் சுட்டபோது மணமகன் பலியாகியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் பல கோணங்களில் விசாரணை நடக்கிறது. மணமகனை சுட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.