சென்னை:

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக விமர்சனம் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தான் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் எஸ்.வி.சேகர் தலைமறைவாகி உள்ளார்.

இந்நிலையில் எஸ்.வி.சேகருக்கு, அவரது உறவினரும், தமிழக தலைமை செயலாளருமான கிரிஜா வைத்திய நாதன் அடைக்கலம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக தலைமை செயலாளராக இருப்பவர்  கிரிஜா வைத்தியநாதன், தமிழக பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகரின் சகோதரர் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.