நியூயார்க்

ஹாலிவுட் திரைப்படமான ‘பிளாக் பேந்தர்’ வசூல் சாதனையில் ‘டைட்டானிக்’ திரைபடத்தை முறியடித்து முன்னேறி வருகிறது.

                        டைட்டானிக்

ஹாலிவுட் திரைப்பட நிறுவனமான டிஸ்னி மற்றும் மார்வெல் ஸ்டுடியோ  தயாரித்துள்ள ‘பிளாக் பேந்தர்’ திரைப்படம் 665.4 மில்லியன் டாலர் (ரூ. 4321.5 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படம் ஆகும்.  அதே நேரத்தில் வசூலிலும் இந்தப் படம் சாதனை புரிந்து வருவது குறிப்பிடத் தக்கது ஆகும்.  ’சாத்விக் போஸ்மென்’ நடித்துள்ள இந்தப் படம் வட அமெரிக்காவில் வசூல் சாதனையை குவித்து வருகிறது.

இது வரை வெளியான ஹாலிவுட் படங்களில் மூன்றாவது இடத்தை ‘டைட்டானிக்’ ஆங்கிலத் திரைப்படம் பிடித்திருந்தது.  தற்போது ‘பிளாக் பேந்தர்’ அதை முறியடித்து மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது.   மேலும் வசூல் குவிந்து வருவதால் இந்தப் படம் இரண்டாம் மற்றும் முதலாம் இடத்துக்குச் செல்லலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஏற்கனவே முதல் இடத்தில் “ஸ்டார் வார்ஸ்” மற்றும் இரண்டாம் இடத்தில் ’அவதார்’ ஆகிய படங்கள் உள்ளன.