டில்லி:

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,‘‘ மீட்பு பணியில் துரிதமாக செயல்பட்ட அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், விமானப்படையினர், கமாண்டோக்கள், மாவட்ட நிர்வாகம், உள்ளூர் மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.